மீனாட்சி அம்மன் கோவில் இடத்தில் ரூ.35 கோடியில் தங்கும் விடுதி
- தங்கும் விடுதி கட்டுமான தொடக்க விழா இன்று நடந்தது.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்,கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகர் பகுதியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தங்கும் விடுதி கட்டுமான தொடக்க விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்,கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ.,கோவில் செயல் அலுவலர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில் காதுகுத்து மண்டபம், விருந்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அந்த பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் அ.வல்லா ளப்பட்டி பேரூராட்சி தலைவர் திருகுமரன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைசாமி, கிளை செயலாளர் முத்து, மதுரை மண்டல உதவி கோட்ட பொறியாளர் தனிக்கொடி, துணை ஆணையர் திருப்பூர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.