உள்ளூர் செய்திகள்

வீடு-தோட்டத்தில் கொள்ளை

Published On 2023-04-08 14:18 IST   |   Update On 2023-04-08 14:18:00 IST
  • மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே வீடு, தோட்டத்தில் கொள்ளை நடந்தது.
  • போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் சிந்துபட்டி போலீஸ் சரகம் தும்மக்குண்டு கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனைவி மீனாட்சி(வயது65). இவரது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் நகை ஆகியவை திருடுபோனது.இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(59).இவருடைய தோட்டம் கூடக்கோவில் அருகே உள்ள நெடுமதுரையில் உள்ளது. தோட்டத்தை நெடுமதுரை சேர்ந்த ஆண்டி என்பவர் பரமாரித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்புற கதவை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த மோட்டார் வயர் காயில், வான்கோழி, கின்னி கோழி, நாட்டுக்கோழி மற்றும் இடுபொருட்கள், ரொக்கம் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News