உள்ளூர் செய்திகள்

வேளாண் மாணவிகள் நடத்திய கிராமப்புற மதிப்பீடு

Published On 2023-02-16 08:50 GMT   |   Update On 2023-02-16 08:50 GMT
  • வேளாண் மாணவிகள் நடத்திய கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.
  • மாணவிகள் விவசாயிகளிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்

ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் அலங்காநல்லூர் வட்டாரத்தில் தங்கி இருக்கும் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஆர்த்திகா, அபிநயா, அபிதா, அகல்யா, அம்பிகா, அனுரிதா, அஸ்வினி, ஆஷா, கிருஷ்ணவேணி ஆகியோர் பெரியஇலந்தைகுளம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள சுற்றுச்சூழல், கிராம மக்கள் மற்றும் விவசாய வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். கிராமத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள், அதன் நிலைகள் குறித்து விவசாயிகள் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் கிராம மக்கள் ஊரில் உள்ள விவசாய பிரச்சினைகளை மாணவிகளிடம் கூறினர். இங்கு நெல், தென்னை மற்றும் மல்லிகை, ரோஜா ஆகியவை பயிரிடப்படுகிறது. அதற்கான விலை கிடைப்பதில்லை. நோய்கள் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்று கிராம மக்கள் கூறினர். இவற்றில் இருந்து எவ்வாறு பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று மாணவிகள் விவசாயிகளிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News