பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்கள் பள்ளியில் சேர்க்கை
- பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்கள் அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்க்கை கலெக்டர் அனீஷ்சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
- இப்பள்ளியில் பிரெய்லி செயல்முறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கல்வியும், கணினி, இசை மற்றும் உடற்கல்வி சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பயிற்சியும் போதிக்கப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெறுகிறது.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 572, கே.கே.நகர், மதுரை-20 என்ற முகவரியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிரெய்லி செயல்முறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கல்வியும், கணினி, இசை மற்றும் உடற்கல்வி சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பயிற்சியும் போதிக்கப்படுகிறது.
இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன், சீருடை, இலவச மருத்துவம், தங்கும் விடுதி ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசு மூலமாக இப்பள்ளி காற்றோட்டமான வகுப்பறை மற்றும் தூய்மையான பள்ளி வளாகத்துடன் நிர்வகிக்கப்படுகிறது. விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை பாதுகாத்து பராமரிக்க அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுவதால் பார்வை த்திறன்குறையுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கும்படியும், இப்பள்ளி தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0452-2529502 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.