சுந்தரானந்த சித்தர் அவதார தின திருவிழா
- சுந்தரானந்த சித்தர் அவதார தின திருவிழா நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழக சட்டமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை தாக்கல் செய்தபோது இந்து சமய அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழகத்தில் உள்ள பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய கோவில் களில் ஆண்டுதோறும் சித்தர்களுக்கு விழா எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் கமலமுனி சித்தருக்கும், சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணன் சுவாமி கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்தா சித்தருக்கும் கோவில்கள் சார்பில் விழா எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 3-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை) கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரானந்த சித்தர் அவதார தின பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையும், 8 மணிக்கு திருமுறை பாராயணமும், 10 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. 11 மணிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சமய சான்றோா ர்கள் முன்னிலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து "சித்தர்களின் பெருமை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.