உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
- பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பயிற்சியை தொடங்கி வைத்தார்.
- ஆசிரியர் பயிற்றுனர் பிரபாகரன் மாணவிகளை வழி நடத்தினார்.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மடத்துக்குளம் சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கராத்தே பயிற்சியாளர் சந்தோஷ்குமார், மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கி உள்ளார். பெண்கள், உடல், மனம் வலிமை பெற தற்காப்பு பயிற்சி அவசியம் எனவும், மாணவிகள் தன்னம்பிக்கையோடு அனைத்து சூழ்நிலைகளை கையாளுவதற்கும் உதவும் என பயிற்சி பொறுப்பாசிரியர் புவனேஸ்வரி ஊக்கப்படுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பயிற்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் பிரபாகரன் மாணவிகளை வழி நடத்தினார்.