உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தீண்டாமை கொடுமையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-07 15:42 IST   |   Update On 2022-12-07 15:42:00 IST
  • கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  • ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவோணம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கிளாமங்கலம் கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமையை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவோணம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு நீலமேகம், சுரேஷ்குமார், செல்வம் ஆகியோர் தீண்டாமை கொடுமையை கண்டித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு ராமசாமி, மாநகர செயலாளர் வடிவேலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News