உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.


எஸ்.தங்கப்பழம் மருத்துவக் கல்லூரி சார்பில் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ முகாம்

Published On 2022-11-19 14:22 IST   |   Update On 2022-11-19 14:22:00 IST
  • சித்த மருத்துவ இயக்குனர் உஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
  • அரசு அலுவலர்களுக்கு இயற்கை உணவு முறைகள் நோய்களுக்கு ஏற்றவாறு யோகாசன பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு எஸ்.தங்கப்பழம் மருத்துவக் கல்லூரி சார்பில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, சித்த மருத்துவ இயக்குனர் உஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற அரசு அலுவலர்களுக்கு இயற்கை உணவு முறைகள் நோய்களுக்கு ஏற்றவாறு யோகாசன பயிற்சிகளும் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

மேலும் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News