உள்ளூர் செய்திகள்
மேட்டூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு திரும்பினார்கள்
- மேட்டூர்நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த மாத சம்பளத் தொகையை வழங்கவில்லை என கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது.
மேட்டூர்:
மேட்டூர்நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 100 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த மாத சம்பளத் தொகையை வழங்கவில்லை என கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சம்பளத்தொகை வழங்கப்–பட்டபதை அடுத்து இன்று காலை முதல் அனைவரும் பணிக்கு திரும்பினார்கள்.