உள்ளூர் செய்திகள்

முருங்கை கீரை விலை எகிறியது ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனை

Published On 2022-11-01 14:53 IST   |   Update On 2022-11-01 14:53:00 IST
  • மேட்டூர், கொளத்தூர் , மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பல ஏக்கர் பரப்பளவில் முருங்கை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு கட்டு முருங்கைகீரை ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

சேலம்:

சேலம் மாவட்டம் வீரபாண்டி, மகுடஞ்சாவடி, மாவேலிபாளையம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் முருங்கை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர மேட்டூர், கொளத்தூர் , மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் முருங்கை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து முருங்கை கீரை அறுவடை செய்து, அதனை வியாபாரிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், தினசரி சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது முருங்கை கீரை வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கட்டு முருங்கைகீரை ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அதிக எண்ணிக்கை கொண்ட ஒரு கீரை கட்டு ரூ.20 வரை விற்கப்படுகிறது. 

Tags:    

Similar News