பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் சீராக அமைக்கப்படாத சிமெண்ட் சிலாப்புகளால் வாகன ஓட்டிகள் அவதி
- இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தண்டவாள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
- பள்ளி மாணவிகள் இந்த பகுதியை கடக்க சிரமப்படுகின்றனர்.
தென்காசி:
தென்காசி - நெல்லை சாலையில் உள்ள பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களுக்கு இடையே சாலையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பராமரிப்புக்காக அகற்றப்பட்டன. பணிகள் முடிந்த பிறகும் சாலையில் பதிக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் சரி செய்யப்படாமல் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தண்டவாள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
ஏற்கனவே இந்தப் பகுதியில் நான்கு வழிச்சாலை மேம்பால பணிகள் நடந்து வருவதால் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட இந்த பகுதியை கடப்பதற்கு மிகுந்து சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிமெண்ட் சிலாப்புகளை சீராக அமைத்து தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.