போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.
நல்லம்பள்ளி வட்டார அளவிலான மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
- போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெறும் 12 மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கு பெறுவார்கள் என பள்ளி கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வட்டார அளவிலான 2022 சதுரங்க விழிப்புணர்வு போட்டியினை நேற்று தருமபுரி பள்ளி கல்வித்துறை சார்பில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள், 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்கள், 11 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட 380 மாணவ, மாணவியர்கள் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சென்ராயன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் ராகோபால், முன்னிலை வகித்தார். தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் ஏ.எஸ்.சண்முகம் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த போட்டியின் முடிவில் வெற்றி பெறும் 12 மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கு பெறுவார்கள் என பள்ளி கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் லலிகம் உயர்கல்வி ஆசிரியர் சாக்ரடீஸ் நன்றி கூறினார்.