கதர் கிராம தொழில் அலுவலகத்தில் தலைமை செயல் அலுவலர் திடீர் ஆய்வு
- காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலைய காதி கிராப்ட் விற்பனை நிலையம் பூமாலை வணிக வளாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கதர் கிராம தொழில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மோகனூர் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மோகனூர் எழில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடி கொள்முதல் மையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சோப்பு உற்பத்தி அலகு கட்டடத்தை பார்வையிட்டு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பிற துறைகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.