உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க வந்த பொதுமக்கள். 

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் ஒதுக்கக்கோரி ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க வந்த பொதுமக்கள்

Published On 2023-09-05 10:06 GMT   |   Update On 2023-09-05 10:06 GMT
  • 98 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு இடித்து அகற்றம்
  • எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் இடிக்கப் பட்ட இடத்திற்கு அருகி லேயே இடம் ஒதுக்க வேண்டும் என அங்கு வசித்தவர்கள் கூறி வந்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சரளை மேடு காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 98 வீடுகள் நீதிமன்ற உத்த ரவுப்படி கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது.

மாற்று இடம்

அப்போது அங்கு வசித்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருவதாக அதி காரிகள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் இடிக்கப் பட்ட இடத்திற்கு அருகி லேயே இடம் ஒதுக்க வேண்டும் என அங்கு வசித்தவர்கள் கூறி வந்த னர். இது தொடர்பாக கடந்த வாரம் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவ லகத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

வாயில் கருப்பு துணி கட்டி

இந்த நிலையில் நேற்று சுமார் 50-க்கும் மேற்பட் டோர் வாயில் கருப்பு துணி கட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.மாற்று இடம் வழங்கப்ப டாததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், மாற்று இடம் தருவதாக கூறிய அதி காரி கள். எங்களது ஊராட்சியில் இடம் ஒதுக்கவில்லை. மேலும் ஆக்கிரமிப்பும் முழுமையாக அகற்றப்பட வில்லை என்றனர். இதை யடுத்து அவர்களை அதி காரிகள் சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News