உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் நடைபெற்றபோது எடுத்த படம்.

ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Published On 2023-03-14 14:05 IST   |   Update On 2023-03-14 14:05:00 IST
  • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
  • சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில், 'இந்திய பொருளாதாரத்தில் சமகால பிரச்சினைகள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை வைஜெயந்தி, கருத்தரங்க அமைப்பு செயலாளர் மருதையா பாண்டியன் ஆகியோர் கருத்தரங்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.

புதுச்சேரி பல்கலைக்கழக பொருளியல் துறை இணை பேராசிரியர் சிவசங்கர் இந்திய பொருளாதாரத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும், அதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் விளக்கி கூறினார். அம்பை கலைக்கல்லூரி பேராசிரியர் முத்துசுப்பிரமணியன் இந்திய பொருளாதாரத்தில் மின்துறையில் காணப்படும் பிரச்சினைகள் பற்றியும், அதனை சரிசெய்யும் முறைகள் பற்றியும் விளக்கி பேசினார். தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துகுமார், மாலைசூடும் பெருமாள், சிவ இளங்கோ, சிவமுருகன், முருகேசுவரி, அசோகன், உமா ஜெயந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News