கடலூர் அருகே 2 கோஷ்டியினர் மோதல்- 8 பேர் மீது வழக்கு
- கடலூர் அருகே 2 கோஷ்டியினர் மோதல்- 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் தமிழ் குச்சிபாளையம் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வான் பக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து நபர் மாடுகளை குச்சியால் அடித்துக் கொண்டிருந்த போது புகழேந்தி மீது பட்டது. இதனைப் புகழேந்தி கேட்டபோது மாட்டு வண்டியில் சென்றவர் திடீரென்று தாக்கினார். இதனை அறிந்த தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் இந்த தகராறில் சிவமூர்த்தியை, கார்த்தி தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்தி, புகழேந்தி மற்றும் சிவமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெரிய சோழவள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி, சத்தியமூர்த்தி, பக்கிரி, ரவிவர்மா ஆகிய 4 பேர் மீதும், சிவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் டி.குச்சிப்பாளையம் சேர்ந்த ஜீவா, வினோத், புகழ், கார்த்தி என 8 பேர் மீது போலீசார் தனித்தனி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.