உள்ளூர் செய்திகள்
கைதான மங்கை, செல்வி ஆகிய இருவரையும் படத்தில் காணலாம்.
சிங்காரப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
- கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்ற மங்கை (வயது40), செல்வி (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எட்டிப்பட்டி காமராஜ் நகரில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்ற மங்கை (வயது40), செல்வி (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் அடைத்தனர்.