உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் ஓ.என்.ஜி.சி. சார்பில் இன்று காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டி: மாவட்ட கலெக்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
- ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
- ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.