தமிழ்நாடு

பேரூர் கோவிலில் தமிழில் வழிபாடு - நல்ல தீர்ப்பு வரும் என திருமாவளவன் நம்பிக்கை

Published On 2025-02-07 14:59 IST   |   Update On 2025-02-07 14:59:00 IST
  • தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
  • தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கோவை- பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாடவேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பின்னரும் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நல்லத் தீர்ப்பு வருமென நம்பிக்கையோடிருப்போம்.

சமஸ்கிருதத்தை தேவமொழி என நம்பும் சங்கப் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றால், தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அந்த உரிமையை நீதிமன்றம் பாதுகாக்குமென நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.



Tags:    

Similar News