உள்ளூர் செய்திகள்

தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவரும், தொழிலதிபருமான பாஸ்கர் புதிய கிளையை திறந்து வைத்தார்.

பெரியாம்பட்டியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திறப்பு

Published On 2023-06-29 15:02 IST   |   Update On 2023-06-29 15:02:00 IST
  • தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவரும், தொழிலதிபருமான பாஸ்கர் புதிய கிளையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
  • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுப்புலட்சுமி கணினி சேவையை தொடங்கி வைத்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 536-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சேலம் மண்டல மேலாளர் குமரேசன் தலைமை தாங்கினார்.

தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவரும், தொழிலதிபருமான பாஸ்கர் புதிய கிளையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

மூகாம்பிகை லாரி சர்வீஸ் உரிமையாளர் கே. மகாலிங்கம் பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுப்புலட்சுமி கணினி சேவையை தொடங்கி வைத்தார்.

விழாவில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி நந்தி சிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன், காரிமங்கலம் அரிமா சங்கத் தலைவர் பொன்னுசாமி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வங்கிக் கிளை மேலாளர் விஜயன் வரவேற்று பேசினார்.

முடிவில் மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News