ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
- ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள ரைஸ் மில்லில் கடந்த 6-ந் தேதி சுமார் 20 டன் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்தது கண்டுபிடித்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடிவந்தனர்.
திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்பி சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த 2 பேரை தேடிவந்தனர்.
இந்நிலையில் களரம்பட்டி ரைஸ்மில்லில் பதுங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்கிற பாரதி ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.