உள்ளூர் செய்திகள்

பென்னக்கோணம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

Published On 2023-05-15 14:17 IST   |   Update On 2023-05-15 14:17:00 IST
  • பென்னக்கோணம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது
  • திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பென்னக்கோணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மகா மாரியம்மன், செல்லியம்மன், அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மலர் அலங்காரத்துடன் தினமும் சாமி வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

அதன் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் தேரோட்டம், மேள, தாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.கீழக்குடிக்காடு, கழனிவாசல், பெருமத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவச கோஷத்துடன், தேரின் வடம் பிடித்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News