உள்ளூர் செய்திகள்
காயல்பட்டினம் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு
- காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் 'எனது குப்பை எனது பொறுப்பு' மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு நகராட்சி தலைவர் முத்துமுகமது தலைமை தாங்கினார். ஆணையாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கவேண்டும் என்று நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அப்துல் காதர், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.