உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசினார்.

லஞ்சம் கேட்பவர்களை போலீசில் பிடித்து கொடுங்கள் - கலெக்டர் அறிவுரை

Published On 2023-03-02 09:24 GMT   |   Update On 2023-03-02 09:24 GMT
  • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

நாகப்பட்டினம்:

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.

இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News