உள்ளூர் செய்திகள்

கல்யாணிபுரத்தில் உணவு கூட அறைக்கான அடிக்கல்லை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. நாட்டிய போது எடுத்தபடம்.

கடையம் யூனியன் பகுதியில் ரூ.17லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் - மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-02-11 14:52 IST   |   Update On 2023-02-11 14:52:00 IST
  • கடையம் யூனியன் கீழக்கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்யாணிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் உணவு கூட அறைக்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
  • விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடையம்:

கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்யாணிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் உணவு கூட அறை, மந்தியூர் ஊராட்சி பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் களம் அமைப்பதற்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஆலங்குளம் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செய லாளர் கதிரவன், தலைமை கழக செய்தி தொடர்பாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் ராதா, மாநில தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், இளங்கோ, கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் நுருல் ஹமீர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் விஜய், திரு ஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News