உள்ளூர் செய்திகள்

அக்கரை செங்கப்பள்ளியில் ஒரு நாள் மட்டும் செயல்படும் பொது நூலகம்

Published On 2022-12-16 14:45 IST   |   Update On 2022-12-16 14:45:00 IST
  • வாரம் முழுவதும் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் புத்தகப் பிரியர்கள் பொதுநலத்தை பயன்படுத்துவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் இயங்கும் பொது நூலகம் 2011-ம் ஆண்டு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தற்சமயம் பொது நூலகம் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படுகின்றன.

இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் புத்தகப் பிரியர்கள் பொதுநலத்தை பயன்படுத்துவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் மேலும் கிராமத்தில் படித்து வரும் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதினால் தங்களுக்கான வேலை வாய்ப்பு அல்லது பொது விஷயங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை படிப்பதிலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மேல்படிப்பு படிப்பதற்காக இருக்கும் மாணவர்களுக்கும் இந்த பொது நூலகம் மிகவும் அத்தியாவசியமாக ஒன்றாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது பொது நூலகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பொது நூலகம் சுற்றி இருக்கும் முட்புதர்களால் பாம்பு, தேள் போன்ற விஷத்தன்மை உள்ள உயிரினங்களால் ஆபத்்து ஏற்படும் எனவே சுற்றியுள்ள முட்பதர்களை அகற்றித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News