உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2023-02-14 07:38 GMT   |   Update On 2023-02-14 07:38 GMT
  • கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
  • வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட குன்னலூர் ஊராட்சியில், குடிசை தீவில் இருந்து எக்கல், கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இந்த சாலையானது மேலமருதூர் மெயின் சாலையை இணைக்கும் வழித்தடமாக இருப்பதால், விவசாயிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த வழியாக தான் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பூமிநாதன் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News