உள்ளூர் செய்திகள்
செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம்
- மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
- இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.