உள்ளூர் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்தபெருவிழா
- துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடநட்தது
- பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டுகிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 9-ந் தேதி மகாபாரத அக்னி வசந்தபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் கடைசி நாளான நேற்று துரி யோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்டைக்கூத்து கலைஞர்கள் துரியோதனன், பீமன் வேடமிட்டு துரியோதனன் படுகள காட்சியை நடித் துக்காட்டினர். இதைத்தொ டர்ந்து நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத் தினர்.