உள்ளூர் செய்திகள்

கொள்ளையடிக்கப்பட்ட வங்கி 

தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் நகை, பணம் கொள்ளை...பட்டப் பகலில் நிகழ்ந்த பயங்கரம்

Published On 2022-08-13 17:40 IST   |   Update On 2022-08-13 17:40:00 IST
  • முன்னாள் வங்கி ஊழியர் நண்பர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்.
  • வங்கி காவலாளியை கட்டிப் போட்டு விட்டு கொள்ளை.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கிக்கு இன்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய கட்டிப் போட்ட அவர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அந்த வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

முதல் கட்ட விசாரணையின் முடிவில் அந்த வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியரே தனது நண்பர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பபட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது. கொள்ளைர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக் கொள்ளை அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News