மாரிச்செல்வம்.
சிவகிரி அருகே ரவுடி தூக்குப்போட்டு தற்கொலை
- மாரிச்செல்வம் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் மாரிச்செல்வம் கிடந்துள்ளார்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் - தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் மீது சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து உள்ளார். நேற்று காலைஅவரது பெற்றோர் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாரிச்செல்வம் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து சிவகிரி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து மன உளைச்சல் காரணமாக மாரிச்செல்வம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.