உள்ளூர் செய்திகள்
தீக்குளித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி சாவு
- கமலநாதன். இவரது மனைவி சுலோச்சனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள கோராத்துப்பட்டி சத்யா காலனி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மனைவி சுலோச்சனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சுலோச்சனா வீட்டில் இருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த சுலோச்சனாவை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.