உள்ளூர் செய்திகள்
மரக்கன்று நடப்பட்டது.
- தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகேகதிராம ங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருவேங்கடம் 33-ம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்று கள் நடப்பட்டது.
விழாவை கதிராமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
சீர்காழி வட்டா ரக்கல்வி அலுவலர்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.