உள்ளூர் செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

மரக்கன்று நடும் விழா

Published On 2023-09-22 13:13 IST   |   Update On 2023-09-22 13:13:00 IST
  • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
  • செம்பனார்கோயில்- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தரங்கம்பாடி:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை, மரக்கன்றுகள் நடுதல், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு செம்பனா ர்கோயில் - தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சா லையில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News