உள்ளூர் செய்திகள்

தென் பெண்ணையாற்றில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி

Published On 2025-01-16 11:09 IST   |   Update On 2025-01-16 11:09:00 IST
  • குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
  • பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவெண்ணைநல்லூர்;

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் குரு பிரசாத்( வயது15). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று மதியம் நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாற்றில் குளிக்க. சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென குரு பிரசாத் நீரில் மூழ்கி மாயமானார். உடன் வந்த நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேடிப் பார்த்தனர்.

குரு பிரசாத் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரர் தலைமையிலான மீட்பு குழுவினர் வரவைத்து நீரில் மூழ்கி மாயமான குரு பிரசாத்தை தீவிரமாக இரவு 11 மணி வரை தேடி வந்தனர்.

வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் குளிரின் காரணமாகவும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி மாயமான குருபிரசாத்தை தேடும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .

தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இன்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் குருபிரசாத் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நண்பருடன் குளிக்கச் சென்று பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News