உள்ளூர் செய்திகள்

அப்துல்கலாம் படத்தை வரைந்து மாணவர்கள் மரியாதை செய்தனர்.

பள்ளி மாணவர்கள் 100 அடி உயர அப்துல்கலாம் படம் வரைந்து மரியாதை

Published On 2023-07-27 13:58 IST   |   Update On 2023-07-27 13:58:00 IST
  • 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் படம் வரைந்தனர்.
  • அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி மரியாதை செய்தனர்.

சீர்காழி:

சீர்காழி முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத்த லைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளை யொட்டி 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் ஒருவருக்கு ஒரு அடி வீதம் கொண்ட சாட் அட்டை காகிதத்தில் அப்துல்கலாமின் உருவபடத்தின் பல்வேறு பகுதிகளை தனித்தனியே வரைந்து வண்ணமிட்டு அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து 100 அடி அளவில் பெரிய அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி அந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

நிகழ்வில் பள்ளி தாளாளர் சி.பி.சிவசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞானசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News