உள்ளூர் செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

Published On 2023-06-20 01:22 GMT   |   Update On 2023-06-20 01:23 GMT
  • நேற்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது
  • 14 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டப் பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்து வந்தது. நேற்று காலையும் கனமழை பெய்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்றிரவு சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஆனால், வானிலை மையம் இன்று காலை  7 மணி வரை 14 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே அறிவித்துள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News