தமிழ்நாடு

ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை தி.மு.க. போராட்டம்

Published On 2025-01-07 06:45 IST   |   Update On 2025-01-07 06:45:00 IST
  • ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
  • மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்றுக் கூடிய இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ் நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் "மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்."

"மாநில உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத, தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியை உடனடியாக ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும்." ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு" என நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்," என குறிப்பிட்டு இருந்தார்.

Tags:    

Similar News