உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக பிரார்த்தனை

Published On 2023-02-24 08:03 GMT   |   Update On 2023-02-24 08:03 GMT
  • இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக பிரார்த்தனை நடந்தது.
  • இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.இங்கு மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் தனியார் மவுன்ட் போர்டு பள்ளி மாணவர்கள் வருகிற பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்காக தயார்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். மாணவர்கள் கொண்டு வந்த நுழைவு தேர்வு சீட்டினை இடைக்காட்டூர் திருஇருதய திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசனிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News