உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்-கலெக்டர்

Published On 2023-08-03 06:52 GMT   |   Update On 2023-08-03 06:52 GMT
  • கால்நடை மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
  • சிவகங்கையில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் கலெக்டர் பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தில் பால்வளம், கால்நடை பராமரிப்பு துறைகளின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 240 முகாம்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டும் 240 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதன் அடிப்படையில் மானாமதுரை பகுதிகளில் 2-வது மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இன்னும் கூடுத லாக பால் உற்பத்தியினை பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும். அசோலா தீவன உற்பத்தி செய்து கால்நடை வளர்ப்போர் பயன்பெற வேண்டும். அத்தீவனத்தின் மூலம் பால் உற்பத்தியும் மேம்படுத்துவதற்கு அவை அடிப்படையாக அமையும். இதுபோன்று பல்வேறு திட்டங்கள் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விவசாயிக களுக்கு தாது உப்பு கலவை, உலர் தீவன மூடைகள், பால் உற்பத்தி யாளர்களுக்கு பாத்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் அங்கு அமைக்க ப்பட்டிருந்த கண்காட்சி யையும் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சித் தலை வர் சேங்கைமாறன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், பொது மேலாளர் (ஆவின்) ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் முகமதுகான், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News