உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தபோது எடுத்தபடம்.

தாரமங்கலத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-19 13:05 IST   |   Update On 2022-06-19 13:05:00 IST
தாரமங்கலத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சார்பாக தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது . 5 வயது முடிந்த அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது .

பேரணிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் அமலா, வாசுகி ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியில் அரசின் 14 வகையான நலத்திட்டங்கள், தமிழ் வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் தமிழ்வழியில் படித்தோருக்கு முன்னுரிமை, இலவசகல்வி, கட்டாயக்கல்வி பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு தாரமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தாரமங்கலம் முக்கியவீதிகள் வழியாக சென்று பேரணி நிறைவடைந்தது.

இதில் வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள்,ஆ சிரியர் பயிற்றுநர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News