உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

சுருளி அருவியில் சுற்றுலா தினத்தையொட்டி மாணவர்கள் விழிப்புணர்வு

Published On 2023-09-30 04:34 GMT   |   Update On 2023-09-30 04:34 GMT
  • சுருளி அருவியில் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
  • சுருளி அருவி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி:

தேனி அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து கடந்த 27ந்தேதி முதல் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி வருகிற 2ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உலக சுற்றுலா தினம் மற்றும் சுருளி சாரல் திருவிழாவினை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சுருளி அருவி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

போடி ஏல விவசாய சங்க கல்லூரியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சுருளி அருவி பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம், உணவருந்தும் இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு இணையான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரக புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், சுருளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சித்ராதேவி, காயத்ரி, வன சரக அலுவலர் பிச்சைமணி, சுற்றுலா அலுவலர் (பொ) பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News