உள்ளூர் செய்திகள்

மழையில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது- அந்தியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. படுகாயம்

Published On 2022-07-28 03:50 GMT   |   Update On 2022-07-28 03:50 GMT
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.
  • விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

அந்தியூர்:

அந்தியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏ.ஜி.வெங்கடாசலம் (60). இவர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு அந்தியூரில் இருந்து கார் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வந்த கார் பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News