உள்ளூர் செய்திகள்

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்.

மாயனூர் கதவணையில் கரைபுரளும் காவிரி ஆறு

Published On 2022-08-04 14:57 IST   |   Update On 2022-08-04 14:57:00 IST
  • க.பரமத்தி அருகே உள்ள கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு இன்று காலை 6.00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.
  • 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 15.94 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர்:

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மே 24-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3,000 கனஅடி முதல் அதிகபட்சமாக 1.20 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் நேற்று காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இன்று காலை அது 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் பவானி சாகர், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் காவிரி ஆற்றில் சேர்ந்து மாயனூர் கதவணைக்கு வந்து சேர்கிறது.

இதனால் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி மாயனூர் கதவனைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்திற்கு 256 கனஅடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 256 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்கால்களில் 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 33.86 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு இன்று காலை 6.00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 15.94 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News