உள்ளூர் செய்திகள்
சோழவரம் அருகே பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம்
- கடந்த 3 நாட்களாக அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
- அமிர்தலிங்கம் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த ஞாயிறு அருமந்தை கிராமம் மேடங்குளம் பகுதியில் வசித்து வந்தவர் அமிர்தலிங்கம் (வயது48).கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் வீடும் பூட்டப்பட்டு கிடந்தது.
இந்த நிலையில் அவரது நண்பர்கள் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள அறையில் அமிர்த லிங்கம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.
இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அமிர்தலிங்கம் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.