உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது.
- நிலை தடுமாறிய கண்ணன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வைரவன். இவரது மகன் கண்ணன் (வயது 25) கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நள்ளிரவு 1.30மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய கண்ணன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.