உள்ளூர் செய்திகள்
ஐ.ஐ.டி. வளாக கட்டுப்பாடு... பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
- வேளச்சேரி சாலையில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- நுழைவு வாயிலில் இருந்து அழைத்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் வாகனங்களின் வேகத்தை 20 கி.மீ. ஆக குறைத்துள்ளது.
அதனை மீறினால் ரூ.10 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதை கண்டித்து இன்று வேளச்சேரி சாலையில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நுழைவு வாயிலில் இருந்து அழைத்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கு அழைத்து செல்லும் பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.