உள்ளூர் செய்திகள்

மறுமணம் செய்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டல்- நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

Published On 2024-11-08 09:10 GMT   |   Update On 2024-11-08 09:10 GMT
  • துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார்.
  • பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் அழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (வயது 40) பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு திருமணமாகி பின்னர் கடந்த 2012ல் விவாகரத்து ஆனது. இவர் வயலூர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் இலங்கையை சேர்ந்த இளங்கோ என்கிற ஜானி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

பின்னர் துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார். இதற்காக இளங்கோவை அழைத்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் துபாயில் இருந்தார். அப்போது அவர் உடை மாற்றுவதையும் குளிப்பதையும் இளங்கோ வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அதை வைத்து இளங்கோ அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதில் நான் தற்போது ஈரோட்டை சேர்ந்த ஜீவா என்பவரை மறுமணம் செய்து முசிறியில் வசித்து வருகிறேன். என் கணவரை விட்டு பிரிந்து லண்டனுக்கு வந்து விட வேண்டும். இல்லாவிட்டால் எனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலும் நாம் தமிழர் குழுவிலும் பதிவேற்றம் செய்து விடுவேன் என இளங்கோ மிரட்டி வருகிறார்.

தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் இளங்கோ மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News