உள்ளூர் செய்திகள்

சென்னை- போளூர் தேசிய நான்கு வழி சாலையில் விபத்து

Published On 2024-03-22 07:05 GMT   |   Update On 2024-03-22 07:05 GMT
  • லாரி ஓட்டுநர் புறவழி சாலையில் இருந்து லாரி எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழி சாலையில் சேத்துப்பட்டு நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து நெல் ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி வந்த லாரியும், போளூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற தடம் எண் 148 என்ற அரசு பேருந்தும் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த லாரியில் இடித்து நின்றது, இதில் பேருந்தில் வலது புற கண்ணாடியும், லாரியின் வலதுபுற கண்ணாடியும் ஒன்றோடு ஒன்று மோதி இடித்து சேதம் அடைந்த நிலையில் நின்றது, இதில் ஆத்திரம் அடைந்த லாரி ஓட்டுநர் புறவழி சாலையில் இருந்து லாரி எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் போலீசார் லாரி ஓட்டுனரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் லாரி ஓட்டுநர் லாரி எடுக்க மறுத்துவிட்டார். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் எடுத்துக் கூறியும் லாரி ஓட்டுநர் லாரி எடுக்க மறுத்து பைபாஸ் சாலையிலேயே நிறுத்தினார். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் காவலர்களின் அறிவுரை ஏற்று லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுனர் மீது புகார் செய்ய காவல் நிலையம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News