உள்ளூர் செய்திகள்
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்- ரவுடி உள்பட7பேர் கைது
- செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ரவுடி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்.
- கைதானவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதிகளில் செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ரவுடி கும்பல் பணம்கேட்டு மிரட்டுவதாக பூந்தமல்லி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஜவகரிடம் தொடர்ந்து புகார்கள் வந்தது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் கூட்டாளிகளான விஷ்வா, மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் , காவல்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கார் பறிமுதல் செய்யப்பட்டது.